கோவை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வசந்த மண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில் குமார், முன்னாள் அறங்காவலர் உறுப்பினர் செக்கம்புதூர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய வசந்த மண்டபம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply