கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருப்பணிகள் காரணமாகவும், மேலே செல்வதற்கான போதிய நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் இல்லாததாலும், இனிமேல் குறிப்பிட்ட சில நாட்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
இந்தத் தகவலை கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறைகள் மற்றும் முக்கிய விசேஷ நாள்களில், மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். இந்த நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் அல்லது கோயிலின் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
மருதமலை கோயில், தமிழர் வாழ்வியலில் பெரும் இடம் பெற்ற முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்றதாகும். கோவை நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மேடுபகுதியில் அமைந்துள்ள இந்த கோயில், முருகனின் ஏழாவது படை வீடாகப் போற்றப்படுகிறது.
Leave a Reply