மனைவியை விரட்டி விட்டு, மகளிர் தினமா? – அமீர் காட்டம்

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை  இயக்குநர் அமீர் மறைமுகமாக சாடி தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார். இதற்கு தவெகவினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மகளிர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.அதில், நீலாங்கரை வீட்டில் இருந்து தன்னை விரட்டியதாகவும், இதனால், சென்னையில் தங்க இடம் இல்லாமல் தவிப்பதாகவும், நீலாங்கரையிலுள்ள விஜய் வீட்டில் தன்னை தங்க அனுமதிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

விஜய்க்கு பலமே மகளிர் வாக்குகள் தான் என்ற போதிலும் அவர் ஏன் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி நடந்துக் கொள்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆ

இதனிடையே இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில், மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். அவர் கட்சி மற்றும் யார் பெயரையும் குறிப்பிடவில்லை . எனினும், மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளதாகவே தெரிகிறது.