கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது.
கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல் சிந்திக்கிறார்கள். நம் மனதில் ஒரு எண்ணம் எழும்போது, அது உடனடியாக வார்த்தைகளாகவோ அல்லது செயல்களாகவோ வெளிப்படுகிறது. நம் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இடைவெளி இல்லை. இதன் விளைவாக, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தவறுகிறோம். விழிப்புணர்வு என்ற ஒளி பிரகாசிக்கும்போது, நம் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியானது இருக்க வேண்டும். சூரிய ஒளியில் காய்ந்த விதைகள் ஒருபோதும் முளைக்கப்போவதில்லை. அதேபோல், விழிப்புணர்வானது உதிக்கும் போது, நமது வாசனைகள் என்ற விதைகள் முளைப்பதில்லை. அப்போது நாம் மன்னிக்கும் மனதையும், சாட்சி மனப்பான்மையினையும் பெறுவோம்.”
அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி அர் ஜி அருண்குமார் , அம்மன் கே அர்ச்சுணன்,வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் செந்தில்குமார், ஊட்டி படுகர் சங்கத்தை சேர்ந்த விஜயா, அம்ருதவித்யாலயம் பள்ளிகளின் முன்னாள் இயக்குனர் சுந்தரி வெங்கட்ராமன், வணிக வரித்துறை அதிகாரி சீனிவாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, அம்ருத ஶ்ரீ சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சேலைகள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.
மனிதகுலம் பரஸ்பரம் ஒன்றிணைந்திருப்பதை உணர வேண்டும்: மாதா அம்ருதானந்நமயி தேவி

Leave a Reply