மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக 3% அகவிலைப்படி (DA) உயர்வை அங்கீகரித்துள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை இதை அறிவித்தார். “இந்த உயர்வு ரூ.10,084 கோடி நிதிச் சுமையை ஏற்படுத்தும்,” எனவும், புதிய உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

தற்போது அடிப்படை ஊதியத்தின் 55% அளவில் வழங்கப்படும் அகவிலைப்படி, 3% உயர்வுக்குப் பிறகு 58% ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டின் 1.2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறவுள்ளனர்.

உதாரணமாக, மாதம் ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் தொடக்க நிலை ஊழியரின் சம்பளம், உயர்வுக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.540 அதிகரிக்கும். அதேபோல, ரூ.18,000 அடிப்படையுடன் ரூ.30,000 சம்பளம் பெறும் ஊழியரின் அகவிலைப்படி ரூ.9,900 இலிருந்து ரூ.10,440 ஆக உயர்ந்திடும்.