முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஹரித்வார் செல்லுவதாகக் கூறியபின் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு கோவை திரும்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கருத்துகள் பரிமாறிக் கொண்டோம். எனது கருத்துகளையும் அவர்களிடம் தெரிவித்தேன். அரசியலில் இருப்பவர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிப்பது ஜனநாயக உரிமை. அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது” என்றார்.
மேலும், “அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் கூட அங்கு வந்தார். அவரிடம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். இதுகுறித்து அவர் விவரங்களை கேட்டுள்ளார். மக்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.
அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் செங்கோட்டையன் அங்கிருந்து சென்றுவிட்டார்.



Leave a Reply