2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவினை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன், தொடங்கி வைத்தார். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை, விரல்ரேகைப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர், பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில், காவல் துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவின்போது, காவல்துறையினர் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர்..

Leave a Reply