,

மதுரை மாநகராட்சி மாணவர்கள், அமைச்சருடன் சந்திப்பு

palamivel thiyagarajan
Spread the love

மதுரை ரோட்டரி மிட் டவுன் கிளப் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அருங்காட்சியகம் போன்றவற்றை காண்பதற்காக மதுரை திரு.வி.க. மாநகராட்சி பள்ளி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் ஒரு நாள் பயணமாக சென்னை வந்திருந்ததையொட்டி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், அம்மாணவ – மாணவிகளை தமது முகாம் அலுவலகத்தில் சந்தித்து , அளவளாவினார்.
அத்துடன் முதல் முறையாக விமானத்தில் பயணித்த அவர்களின் அனுபவம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், தன்னுடைய முதல் விமான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதோடு, தமது முகாம் அலுவலகத்தில் அவர்களுக்காக பிரத்
தேயகமாக ஏற்பாடு செய்திருந்த மாலை சிற்றுண்டியை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.