மதுரையில் இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்: “எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்பதே நிகழ்கால ஆளுங்கட்சியின் நோக்கமாக இருக்கிறது. கரூரில் எதிர்க்கட்சிகள் கேட்ட இடத்தை தவிர்த்து, மற்றொரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலைக்கு திமுக அரசு தான் முழுமையாக காரணம். இன்று முதல் கவுண்ட் டவுன் துவங்குகிறது. தேஜ கூட்டணி அரசு அமைக்கும் என நம்பிக்கை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதல்வர் ஆவார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் அதிகரித்து, மக்கள் துயரம் அனுபவிக்கின்றனர். இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி பறக்கிறது; தொண்டர்களால் இயற்கையான கூட்டணி உருவாகும்,” என கூறினார்.


Leave a Reply