கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த மரப்பாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் அறங்காவலர் கண்ணன் இந்து அறநிலையத்துறையிடம் நீதிமன்றம் மூலமாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த திருக்கோவிலில் 28 முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்படித்ததுடன், கோவிலுக்கு சொந்தமான 125 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டுள்ளதாக இத்திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோவில் அறங் காவலராக இருந்த கிருஷ்ணசாமி இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்காமல் பரம்பரை வாழ்நாள் அறங்காவலர்களாக ஜெயச்சந்திரன், முரளி, மொபைல் ரவி, திருமூர்த்தி, எலக்ட்ரீசியன் மயில்சாமி ஆகியோரை நியமனம் செய்துள்ளார், இந்நிலையில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 5 பேரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு கோவில் பணத்தை கையாடல் செய்ததாகவும் புகார்கள் எழுந்து வந்தது, இம்முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பியதால் தற்காலிக அறங்காவலராக இருந்த கண்ணன் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து இந்த முறைகேடு குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் புகாரளித்தார் கண்ணன், இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டார்,இதை தொடர்ந்து இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டது.
மதுக்கரை தர்மலிங்கேஸ்வர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

Leave a Reply