பழைய நோட்டுகளால் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ ஜெயராமின் நிதியுதவி!

Spread the love

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த தங்கமணி 78 வயதான மூதாட்டி. மூதாட்டி தங்கமணி மூன்று வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் தனது மகனை இழந்த இவர், நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் தன்னிடம் செல்லாத 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதை எப்படி மாற்றுவது என்று தனக்கு தெரியாது என்றும், பழைய நோட்டுகளை மாற்ற உதவ வேண்டும் என வலியுறுத்தினார் . இந்தத் தகவலை அறிந்த சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் மூதாட்டி தங்கமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்தை வழங்கினார்.

மூதாட்டி தங்கமணி சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர். ஜெயராமுக்கு நன்றி தெரிவித்தார்