மக்கள் கோரிக்கை – எம்.எல்.ஏ அம்மன் கே. அர்ச்சுணன் உடனடி பதில் பூங்கா திட்டம் செயல்பாட்டுக்கு தயாராகிறது!

Spread the love

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதி, மாநகராட்சி வார்டு எண் 20 இல் உள்ள கணபதி மாநகர் சமூக நலச் சங்கம் மற்றும் பொதுமக்கள் மூன்றாவது பிளாக்கில் அமைந்துள்ள ரேணுகாதேவி கோவிலை சுற்றி உள்ள மாநகராட்சி மொத்த இடத்தில் சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுணன் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வார்டு செயலாளர் எஸ்.பி. சண்முகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கி விரைவில் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.