,

மக்களை சந்திக்கத் தயாராகிறார் உதயநிதி ஸ்டாலின்

mkstalin
Spread the love

உலக அரசியல் அரங்கில் மக்களை நேரடியாக சந்தித்தல், அதற்கான பயணம் மேற்கொள்ளுதல், நடைப்பயணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதனை கண்கூடாக நிரூபிக்கும் வகையில் கடந்த, 2021-சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “நமக்கு நாமே விடியல் பயணம்’’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முந்தைய திமுக ஆட்சிக்கால சாதனைகள், புதிய திட்டங்கள், தமிழகத்தில் திமுக ஏற்படுத்திய புரட்சி மேலும் அப்போதைய அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார்.
அவரது அந்த பயணம், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்தது. அதன் விளை
வாக 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக. 125 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்தது.
அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது அந்தந்த தொகுதிகளின் சிறப்புக்கள், தொகுதிக்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல தரவுகளை, புள்ளி விவரத்துடன் தனது நடை பயணத்தின் போது, பொதுமக்கள் முன் வைத்தார். இது பல தரப்பு மக்களையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் அண்ணாமலையின் “இமேஜ்” உயர்ந்தது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது மோடி ஆட்சி செய்யத் தவறிய மக்கள் நல திட்டங்களை எடுத்துக் கூறினார்.
இது பல மாநில மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் திகழ காரணமாக அமைந்தது. இந்த நடைப்பயணத்தின் காரணமாகத்தான், பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும் பான்மை வருவதை தடுக்க முடிந்ததாக காங்கிரஸ் கட்சியினர் பேசினர்.
இது போன்ற மக்கள் பயணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், ஆளும் கட்சியான திமுகவும் வரும் 2026 சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு, மக்களை நேரடியாக சந்திக்கும் பயணங்களை அடுத்து வரும் மாதங்களில், நடத்த திட்டமிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு அரசியல் யூகங்களை வகுத்து, அதனை செயல்படுத்த கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
தகவல் தொழில் நுட்பம் எல்லலையில்லாமல் வளர்ந்து விட்ட இன்றைய கால கட்டத்தில், அதிமுக தகவல் தொழில்நுட்பத் துறை பிரிவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, அதில் உள்ள நிர்வாகிகளுக்கு திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை சமூக ஊடகங்கள் வாயிலாக உடனடியாக கொண்டு சேர்க்க கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் திராவிட கொள்கைகள், அதிமுகவின் கட்சி விதிமுறைகள் உள்ளிட்டவர்களை, திறம்பட பேசும் சிந்தனையாளர்களை உருவாக்க கட்சியின் இரண்டாம் அட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கொள்கை ரீதியாக, அதிமுக பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என அதிமுக தலைமை விரும்புவதால், இந்த பணியையும் மேற்கொள்ள உள்ளது.
மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில், துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், தற்போது அந்தந்த துறை அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்களின் செயல்பாடுகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல அதிமுக பொதுச்செயலாளர் உத்தரவிட்டார்.
மேலும் அவர், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, திமுக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களிடம் நேரடியாக பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதனால் அதிமுக மீது மக்களின் கவனம் திரும்பும்.
திமுக கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் செயல்பாடுகளை பார்த்து, தேர்தல் நெருங்க, நெருங்க அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் எண்ணுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடி, மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்பாடுகள் தயார்

துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தலைமை கொடுக்க இருப்பதாக, பேச்சுக்கள் எழுந்த போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தக் கருத்து வலுத்து இருக்கிறது; பழுக்கவில்லை என குறிப்பிட்டு,அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மக்களை நேரடியாக சந்திக்கும் பயணத்தினை திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியும்,அந்தந்த மாவட்ட செயலாளர்களும் செய்து வருகின்ற னர். ஏற்கனவே இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது போல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணம் அமைய உள்ளது. இந்த பயணத்தின் போது திமுக ஆட்சியின் சாதனைகள், புதிய திட்டங்கள், சிறப்பு திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்தல் மேலும் அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளுதல் என இந்தப் பயணம் அமைய உள்ளது. இதன் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இமேஜ் பல மடங்கு உயரும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இப்படியான மக்கள் சந்திப்பு பயணங்கள், மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.