நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 299 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 246 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்தியா தனது முதல் மகளிர் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மரிசான் காப், ஆஷ் கார்ட்னர், அன்னாபெல் சதர்லேண்ட், நாடின் டி கிளார்க், சித்ரா நவாஸ், அலனா கிங், சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சாதனையால் இந்திய மகளிர் கிரிக்கெட் மீண்டும் சர்வதேச அளவில் பெருமை பெற்றுள்ளது.



Leave a Reply