கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் (வயது 45). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு முகேஷ் வயது 21, முத்துக்குமார் (வயது 19) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாயன் மாலை ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார். மூத்த மகன் குடிபோதையில் வீட்டில் இருந்த செம்பை எடுத்து தந்தையின் தலையில் அடித்து உள்ளார். அப்பொழுது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை மகனை தாக்கி உள்ளார்.
மனைவி முத்தம்மாள் இருவரையும் தடுக்கவந்துள்ளார்
அப்பொழுது சிறிய கத்தியால் மாயன் மகனை குத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் மகன் கீழே விழுந்து துடித்தான் .பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் அவரது தம்பி சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்.இதை அடுத்து கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply