மகனுக்கு பதில் தாய்… பா.ம.க மேடை ஏறிய ராமதாஸ் மகள்

Spread the love

 

இதுதான் பாமக; நான் தான் பாமக தலைவர் என்று சொல்லி வரும் ராமதாஸ் பின்னால் ஒரு கூட்டம் திரண்டு நிற்கிறது. அன்புமணியும் இதையே கூறி வருகிறார். அவர் பின்னாலும் ஒரு கூட்டம் திரண்டு நிற்கிறது. இதில் எது உண்மையான பாமக? யார் உண்மையான பாமக தலைவர்? என்பதில் பாமகவினரிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

இப்படி குழப்பக்கத்துக்கிடையே, பாமக செயற்குழு கூட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி,அருள் உள்ளிட்டோர் இந்த செயற்குழு குழுவில் பங்கேற்றனர். ராமதாசின் மூத்த மகள் காந்திமதி இந்த செயற்குழு மேடையில் இருந்தது பலரையும் வியக்க வைத்தது.

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ மற்றும் பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம், ராமதாசுக்குத்தான் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழுவுக்கு வந்திருந்த ராமதாசின் மூத்த மகள் காந்திமதி மேடைக்கு கீழே அமர்ந்திருந்தார். அவரை ராமதாஸ் அழைத்து மேடையில் அமரவைத்தது அரங்கத்தில் வியப்பை ஏற்படுத்திய.

வன்னியர் சங்க மாநாட்டில் காந்திமதி மகன் முகுந்தனுக்குதான் மேடையில் நாற்காலி ஒதுக்க முடியாது என்று அன்புமணி கறார் காட்டியதும் இதனால் ராமதாஸ் மேடையில் வெடித்ததும் குறிப்பிடத்தக்கது.

காந்திமதியின் மகன் முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக நியமனம் செய்தபோதுதான் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் உச்சக்கட்டமானது இந்நிலையில் காந்திமதியை செயற்குழுவுக்கு வரச்சொன்னதோடு அல்லாமல் மேடையேற்றி இருக்கிறார் என்றால் அன்புமணியிடம் இருக்கும் செயல் தலைவர் பதவியை பறித்து காந்திமதிக்கு கொடுக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

இதற்கிடையில் பாமகவின் சட்ட விதிகளின் படி ராமதாஸ் நடத்திய பாமக செயற்குழு கூட்டம் செல்லாது . பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் பனையூரில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அன்புமணி தீர்மானம் நிறைவெற்றியுள்ளார்.