ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவுற்றது.
இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்
கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போரை தொடங்க வைக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது. இந்த சமயத்தில் பேசிய டிரம்ப், உக்ரைன் பெரிய சிக்கலில் உள்ளது. ஆனால் ,நீங்கள் எங்களுடன் இருந்தால், அதிலிருந்து வெளியேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை . நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் ஒரே வாரத்தில் முடிந்திருக்கும். நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் மத்தியில் இல்லையென்றால் என்றால், நீங்கள் ஒருபோதும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மாட்டீர்கள் என்று கூறினார்.
இறுதியில், நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக கூறி உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘அமெரிக்கா வழியாக உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இருப்பதை பயன்படுத்தி, அவர் பேரம் பேச நினைக்கிறார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்திலேயே அவர் அமெரிக்காவை அவமதித்துவிட்டார். அவர் எப்போது அமைதியை விரும்புகிறாரோ, அப்போது மீண்டும் அமெரிக்கா வரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply