கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது காவல்துறையினர் பந்தலை அகற்றிய சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைக்கவும், அன்னயோஜனா திட்டம் குறித்த தகவல் பலகையை அமைக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டிருந்த பாஜக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது காவல்துறையினர் போராட்ட பந்தல், நாற்காலிகள் மற்றும் பாஜக கொடிகள், பேனர்களை விரைவாக அகற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
சம்பவ இடத்திற்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், அனுமதி கோரி கடிதம் வழங்கியிருந்தும் காவல்துறை தரப்பில் எந்த பதிலும் வழங்கப்படாமல் பின்னர் திடீரென கைது செய்ததாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பின்னர் அனுமதி இல்லை என்ற கடிதத்தை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போராட்ட பந்தலை அகற்றிய காவல்துறை சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்



Leave a Reply