கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி நகர அதிமுக வார்டுகளில் உள்ள பூத்களில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு ஆகியவைகளை முன்னாள் அமைச்சரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான
முனைவர் பொள்ளாச்சி.வி .ஜெயராமன் ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி நகர செயலாளர் வி கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே.குரு, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், நகர பொருளாளர் கனகு, நகர அம்மா பேரவை செயலாளர் சுந்தரம் மற்றும் மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
Leave a Reply