,

பொள்ளாச்சி தெருமுனை பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விந்தியா பிரச்சாரம்

எஸ்.பி.வேலுமணி
Spread the love

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி நகரக் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொள்ளாச்சி நகர செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு(எ) திருஞானசம்பந்தம் , பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா மற்றும் மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்