முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,
மௌன ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.முத்துகருப்பண்ணசாமி, மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல்,கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.விஜயகுமார்,மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பி.ஆர்.கே, குருசாமி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பெருந்தலைவர் விஜயராணி ரங்கசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காளீஸ்வரி ஆனந்தராஜ், மாவட்ட, நகர ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply