ஆண்கள் பாரம்பரிய உடைகளுக்குப் பெயர் பெற்ற மினிஸ்டர் ஒயிட் நிறுவனம், பொள்ளாச்சி உடுமலை சாலையில் தனது 58-வது பிரத்யேக ஷோரூமை திறந்து வைத்துள்ளது. இந்த ஷோரூமை வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எம்.சின்னசாமி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அதை அறங்காவலர் கே.நித்தியானந்தன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் உலக சமூக சேவை மையம், வியாபாரி சங்கம், அரிமா சங்கம், அரசியல் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.போத்திராஜ் பேசுகையில், “பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் ஆடைகளை பொள்ளாச்சி மக்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்” என்றார். தலைமை வணிக அதிகாரி சுரேஷ் ராமசுப்பிரமணியம், மேற்கு மண்டலத்தில் நிறுவன தயாரிப்புகளுக்கு கிடைக்கும் ஆதரவை குறிப்பிட்டார்.
புதிய ஷோரூமில் பருத்தி, லினன் சட்டைகள், பட்டு வேஷ்டிகள், பஞ்சகஜம், திருவிழா குர்தாக்கள், குழந்தைகள் பாரம்பரிய உடைகள் உள்ளிட்ட பல தயாரிப்புகள் கிடைக்கின்றன. மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் தற்போது தென்னிந்தியாவில் 58 ஷோரூம்களுடன் சேவையளித்து வருவதுடன், 2026–27க்குள் 100 ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் மினிஸ்டர் ஒயிட் 58-வது ஷோரூம் திறப்பு



Leave a Reply