,

பொறியியல் கல்லூரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ., பட்டப்படிப்புகள், ஆரம்பிக்க ஏ.ஐ.சி.டி.இ. முடிவு-  தனியார் கலை அறிவியல் கல்லூரி அசோசியேசன் கண்டனம்

aicte
Spread the love

தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லூரி நல சங்கத்தினர் கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தொழில்நுட்பம் சாராத கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் பி.பி.ஏ., பி.சி.ஏ. ஆகிய படிப்புகளை 2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் கொண்டு வர உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அறிவித்து உள்ளது.

பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளை நடத்தும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெறவேண்டும் என்ற புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இத்தகைய அறிவிப்பால், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள், நெருக்கடிகள் எழுந்து உள்ளன. இதுதவிர பி.பி.ஏ., பி.சி.ஏ. படிப்புகளுக்கான கட்டணம் கணிசமாக உயர்வதுடன், பிற படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை முற்றிலும் சரியும் வாய்ப்பும் உள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகளில் இந்த பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்ற அறிவிப்பு கல்வியாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு வறுத்தத்தை தருகின்ற நிலையில், இதனை கலை அறிவியல் கல்லூரி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

யு.ஜி.சி அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கலை அறிவியல் கல்லூரி கட்டமைக்கப்பட்டு பாடங்கள் நடத்துகின்றனர். ஆனால் ஏ.ஐ.சி.டி.இ. வழிகாட்டின் அடிப்படையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த படிப்புக்கான கல்வி பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் உள்பட பல்வேறு வசதிகள் இருக்காது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே ஏ.ஐ.சி.டி.இ.வின் இந்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும். தொழில்நுட்பம் சாராத படிப்புகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்க அனுமதிக்க கூடாது. இதுதொடர்பாக தனியாக குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரி கூட்டமைப்பினர் அறிவுறுத்தினர்.