கோவை பேரூர் திருமடத்தில் இன்று காலை குருபூஜை விழா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். நூலினை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் வெளியீட்டார். நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் நூலினை பெற்றுக் கொண்டு நூலாசிரியர் மேகாசக்தி பாரதியை வாழ்த்திப் பேசினார்.
இவ்விழாவில் கணபதி கிராத்தோட்டம் வெ.கிட்டுசாமி, ஈரோடு தென்முகம் வெள்ளோடு சாத்தாந்தை குலமக்கள் நற்பணி மன்ற நிறுவன தலைவர் என்.டி கண்ணுசாமி,கணபதி தமிழ்சங்க நிறுவனர் நித்நானந்தபாரதி உள்பட ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பேரூர் திருமடத்தில் குருபூஜை விழா நூல் வெளியீட்டு விழா நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் பங்கேற்றார்



Leave a Reply