கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில், பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா புகழரங்கம் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது:
“ஆன்மீகம் தழைத்து வளர்ந்தால்தான் உயர்ந்த, ஒற்றுமை கொண்ட சமூகம் உருவாகும். பிறமொழி எதிர்ப்பால் தமிழ் வளரும் என்பது தவறான எண்ணம். மொழி, மதம், கலாச்சாரம்—இவை அனைத்தையும் சமநிலையோடு அணுகும் பண்பாட்டுப் பாதையில் பேரூர் ஆதீனம் நீண்ட காலமாக சென்று வருகிறது.”
மேலும் அவர், “பிரதமர் நரேந்திர மோடி கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் வெற்றிகளைப் பெற்று வருவதற்கு, அவரின் திட்டமிடும் திறனும், உறுதியான ஆன்மீக சிந்தனையும் காரணம்,”எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், பேரூர் ஆதீன மருத்துவமனை அறங்காவலர் குழுவினர், பேரூர் கல்லூரி நிர்வாகக் குழுவினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Leave a Reply