இந்தியாவின் 18 -வது பொதுத் தேர்தல் 7 கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ,இது போன்ற தேர்தல் ஜனநாயகத் திருவிழா நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
இரண்டு முறை இந்திய பிரதமராக இருந்த நரேந்திர மோடியினையே, பிரதமர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அறிவித்து,சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
58 கட்சிகளை கூட்டணியாக சேர்த்து இந்தியா கூட்டணி, தேர்தலை எதிர் கொண்டது.
பாஜக தனிப்பெரும் கட்சியாக 370 இடங்களிலும், கூட்டணி கட்சியாக சேர்த்து 400 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வோம் என முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பாஜக தலைவர்கள் பேசினர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் முதல் கட்ட நடைபெற்றது.
திமுக தலைமையில் இந்தியா கூட்டணி , சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி,தொகுதி உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உள்ள கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாரதிய ஜனதா கட்சி தலைமையில் 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்தித்தது.
நான்கு முனை போட்டியாக நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும் ஆவேசமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தியா கூட்டணி சார்பில், நாட்டின் பல மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பேசியதால் தேர்தல் களம் சூடு பிடித்தது.
மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வாக்காளர்களை கவரும் வகையில், பல அறிவிப்புகள் இருந்ததால், அந்த தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதும் பேசு பொருளானது.
பல மாநிலக் கட்சிகள், வலுவான நிலை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை,இந்தியா கூட்டணியின் தேர்தல் வியூகம் உள்ளிட்ட காரணங்களால் பாஜகவின் வெற்றி குரல் 3,4-ம் கட்ட தேர்தலின் போது மங்கியே காணப்பட்டது.
என்றாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், ஆட்சி அமைக்கும் அருதிப் பெரும்பான்மையை பாஜக பெற்று மீண்டும் மோடியே பிரதமர் ஆவார் என நம்பிக்கையுடன் பேசி வந்தனர் .
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் பாரதிய ஜனதா கட்சி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என ஏழாம் கட்ட தேர்தல் வரை கூறி வந்தனர்.
மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி திகார் சிறைக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜாமினில் வெளி வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடிக்கு
75 வயதாகி விட்டதால், பாஜக விதிகளின்படி உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் ஆவார் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பதில் அளித்த ராணுவத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், இந்த தேர்தலில் மட்டுமல்லாது, 2029 ஆண்டு பொதுத் தேர்தலிலும் மோடியே பிரதமராக இருப்பார் என பதிலடி கொடுத்தார்.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாத் கிஷோர், பெரும்பான்மை இடங்களைப் பெற்று மீண்டும் பாஜக ஆட்சியே மத்தியில் அமைந்து,நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும், பாஜகாவே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என வடநாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
Leave a Reply