கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 வயது குழந்தை மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் வாகனம் வித்யாலய மாற்றுத்திறனாளிகள் மையம் பகுதியில் வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து இவர்கள் பின்னால் மீது மோதியது. இதில் அசோக்குமாரும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்குள் தனியார் பேருந்திலிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுசீலாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்பொழுது அந்த பேருந்திற்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்கள் திடீரென வலது புறத்திலிருந்து இடதுபுறம் தெற்கு கடந்ததும் பேருந்து பின்னால் வந்ததைக் கொண்டு உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் பேருந்தும் மோதியதும் பதிவாகியுள்ளது. தற்பொழுது இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply