, , , ,

பெயரில் மட்டும் அன்பு இல்லை… செயலிலும் அன்பு நிறைந்தவர்தான் நம்ம எஸ்.பி. அன்பரசன்

SP Anbarasan
Spread the love

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தர்ப்பண மண்டபம், நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரை
வில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
நல்லறம் அறக்கட்டளை அமைத்து கோவையில் பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் எஸ்.பி. அன்பரசன். இவர், வேறு யாருமல்ல அரசியலில்
இறங்கி கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர்தான். சொந்த மண்ணுக்கு
தொண்டு செய்து வாழ வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை கொரோனா ஊடரங்கு காலத்தில் கோவையில் நாள்தோறும் 1.50 லட்சம் பேருக்கு உணவளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை மாவட்டத்தில் உணவின்றி யாரும் பசியால் தவிக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் குனியமுத்தூர், பேரூர், தொண்டாமுத்தூர், க.க.சாவடி, புளியகுளம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் 300 சமையல் கலைஞர்களைக் கொண்டு விதவிதமான உணவுகள் தயாரித்து மக்
களுக்கு வழங்கப்பட்டன. காலை மற்றும் இரவு நேரங்களில் சப்பாத்தி மற்றும் உப்புமா, மதிய உணவாக மல்லி சாதம், தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சைவ பிரியாணி போன்றவை தினமும் வழங்கப்பட்டது. அதோடு, அரிசி, சர்க்கரை, கோதுமை, மிளகாய், பருப்பு, எண்ணெய், மிளகு, சீர
கம், புளி, முட்டை, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்ட 31 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் பணி மட்டுமல்ல, மகேசன் பணியையும் எஸ்.பி அன்
பரசன் மேற்கொண்டு வருகிறார். உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், இடையர்பாளையம் மகாலட்சுமி கோவில், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில், குனியமுத்தூர் அறம் வளர்த்த அன்னை மாரியம்மன் கோவில்களிலும் அறப்பணிகள் செய்துள்ளார். மத வேற்றுமை பார்க்காது அனைத்து மக்களுக்கும் நல்ல
றத்தில் இருந்து உதவிக்கரங்கள் நீளும். குறிப்பாக ரம்ஜான் காலத்தில் ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கப்படுவதை குறிப்பிட்டு சொல்லலாம்.


நல்லறம் கல்விப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் சார்பில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்
களின் ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறும் வகையில், எஸ்.பி. அன்பரசன் சிறந்த பேராசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.


இதற்கிடையே, கோவை பேரூர் பட்டீஸ்வரர் நொய்யல் ஆற்றின் கரையில், நீத்தார் சடங்குகள் செய்யும் பகுதிகள் மோசமான நிலையில் இருப்பதை அறிந்த எஸ்.பி. அன்பரசன் அந்த இடத்தில் அழகிய மண்டபம் ஒன்றை கட்ட முடிவுசெய்தார். இதனை அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். தற்போது 15 கோடி செலவில் கட்டி முடித்துள்ளார் எஸ்.பி.அன்பரசன். சிதிலமடைந்த படித்துறை உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் அழகிய முறையில் கட்டப்பட்டுள்ளது. தர்ப்பணம் மண்டப வளாகத்தில் நவகிரககோள்களை குறிப்பிடும் வகையில் ஒன்பது தூண்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தர்ப்பண மண்டபம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி கோயில் நிர்வாகத்திடம் எஸ்.பி. அன்பரசன் ஒப்படைக்கிறார்.அன்றைய தினம் நன்கொடையாளர்கள், மற்றும் பணி புரிந்த தொழிலாளர்களுக்காக சிறு பூஜையும் நடைபெறுகிறது.
பெயரில் மட்டும் அன்பு இல்லை… செயலிலும் அன்பு நிறைந்தவர்தான் நம்ம எஸ்.பி. அன்பரசன்!