பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் கடந்த அக்டோபர் மாதம் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்தார்.அந்த புகாரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது இரண்டாவது வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பெண் போலீசார் உதவியுடன் கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார் சவுக்கு சங்கர்.
Leave a Reply