தேனி மாவட்டத்தில் வடுகபட்டியைச் சேர்ந்தவர் சத்யா நந்தகுமார். இவர் தேனி மாவட்ட தவெக மகளிர் அணிச் செயலாளராக உள்ளார். இவர் தற்போது வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தவெக வரையிலும் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தலைமைக்கு தன்னைப்பற்றி தவறான தகவல்களை கொடுத்து பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
தன் மீது காவல்துறையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று காவல்துறையினரிமே சான்றிதழ் வாங்கி வைத்திருக்கும் நிலையில் தன் மீது காவல்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று லெப்ட் பாண்டி கூறி வருவதாகவும் சத்யா தெரிவித்திருந்தார்.
சத்யா நந்தகுமாரின் வீடியோ வைரலாகி தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தவெக தேனி தெற்கு மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார். சத்யா சொல்லுவது முழுக்க முழுக்க பொய் என்றும், யாருடைய தூண்டிதலினாலோ இப்படி பேசுகிறார் என்றும் கூறியிருந்தார்.
மேலும், சத்யா நந்தகுமாரை ஒருமையில் பேசி, அவரின் ஆடை குறித்தும் அருவறுப்பாக ஆபாசமாக பேசி தே… என்றும் கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் பாண்டி.
தேனியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூராக நடுரோட்டில் காரை நிறுத்திக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடியவர் லெப்ட் பாண்டி. கிரேன் மூலம் ராட்சச மாலை கொண்டு வந்து லெப்ட் பாண்டி கழுத்தில் அணிவித்தனர் ஆதரவாளர்கள். இதையடுத், போலீசார் பாண்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போதும் பாண்டியை கண்டிக்கவில்லை விஜய். இப்போதும் இந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்தும், விஜய்யும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தவெக தொண்டர்கள் குமுறுகின்றனர்.
Leave a Reply