கோவையை சேர்ந்த சிவசங்கரி என்ற இளம் பெண் எம்.டெக்., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்தவர். படிப்பை முடித்தவர் புதியதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற முனைப்பில் புதிய மின்னணு தொழில் நுட்பத்தை கண்டறிந்தார். தொடர்ந்து, இரு சக்கர பெட்
ரோல் வாகனங் களை, அப்படியே மின்சார வாகனமாக்கும் தொழில்
நுட்பத்தில் வல்லுநராக மாறினார். பெட்ரோல் ஸ்கூட்டரை மின்வாகனமாக மாற்றுவதோடு மட்டு
மல்லாமல், புனேவிலுள்ள இந்திய அரசின் ‘ஆட்டோ
மேட்டிவ் ரிசர்ச் அசோசி
யேசன் ஆப் இந்தியா’ மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையங்களிலும் அனுமதியும் வாங்கி கொடுத்து விடுகிறார். பெட்ரோல் ஸ்கூட்ட ருடன் சிவசங்கரி கண்டுபிடித்த பேட்டரி கிட்டை இணைத்து, இ- ஸ்கூட்டராக மாற்ற அதிகபட்சம் ஒரு வாரமே ஆகும். ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், தகுதிச்சான்று ஆகியவை காலாவதியாகாமல் இருக்க வேண்டும். வாகனத்துக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதித்திருந்தால் கண்டிப்பாக அதை செலுத்தியிருக்க வேண்டும். வாகனத்தின் உண்மையான உரிமையாளராக இருந்தால் மட்டுமே சிவசங்கரி மின்வாகனமாக மாற்றி தருவார்.
இது குறித்து, இன்ஜினியர் சிவசங்கரி கூறியதாவது, ‘புதிய
தாக மின்வாகனம் வாங்க
வேண்டு மென்றால், அதிக தொகை பிடிக்கும். அத
னால், குறைந்த செலவில் பெட்ரோல் வாகனத்தையே மின் வாகனமாக மாற்ற திட்டமிட்டேன். முதலில் புதிய பேட்டரி கிட்டை கண்டு பிடித்து, எனது வாகனத்தில் பொருத்தினேன்; சிறப்பாக இயங்கியது.பின்னர், எனது உறவினர்கள், நண்பர்கள் என்று எனக்கு தெரிந்தவர்களின் வாகனங்களுக்கும் பொருத்தினேன். எல்லோரும் வியப்படைந்தனர். பின்னர், என்னை பற்றி கேள்பட்டு பலரும் மின்வாகனமாக மாற்றி தர கேட்டனர். இதனால், ஒரு தொழிற்சாலை அமைக்கும் அளவுக்கு நான் வளர்ந்து விட்டேன். இப்போது, அந்த தொழிற்சாலையில் எத்தனை வாகனங்கள் வந்தாலும் மாற்றி கொடுக்கும் திறன் உள்ளது. என்னை போன்ற இளம் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்துள்ளேன்’ என்கிறார். சிவசங்கரியை 91501 77211, 72008 75111 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பெண் சக்தி : இளம்பெண்ணின் மேஜிக்… கை பட்டால் பெட்ரோல் ஸ்கூட்டர் எலக்ட்ரிக்காக மாறும்!

Leave a Reply