, ,

புரோஜோன் மாலில் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ

Prozone Mall
Spread the love

கோவை புரோஜோன் மாலில் முதன் முறையாக நகரின் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புரோஜோன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், செயல்பாட்டுத்தலைவர் முசாமில் ஜிங்ரு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் சகாயநாதன், தொழில்நுட்ப தலைவர் எஸ்வந்த் ராவ் கூறியதாவது,
“ஒவ்வொரு விழாக்காலங்களிலும் கோவை மக்களுக்காக பல பிரம்மா ண் டங் களை அறிமுகப் படுத்தும் சரவணம்பட்டி புரோஜோன் மால் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு
மால் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும் மற்றும் அலங்காரத்துடன் கூடிய செல்ஃபி ஜோன் – களுடன்,புரோஜோன் எ வெரி பியரி கிறித்துமஸ் என்ற தலைப்பில் கோவையில் பிரம்மாண்டமாக முதல் முறையாக மிக உயரமான கிறிஸ்துமஸ் ட்ரீ புரோஜோன் மாலில் அமைக்கப்பட்டுள்ளது,
இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கோலங்கள் வருகிற டிசம்பர் 20 – ஆம் தேதி கலை நிகழ்ச்சி களுடன் கூடிய கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுக விழாவும், 21 – ஆம் தேதி புரோஜோன் ஜங்கிள் ஜாய்ஸ், குழந்தைகளுக் கான பேஷன் ஷோ,டிராயிங் மற்றும் பெயிண்டிங் போட்டி, 22 – ஆம் தேதி புரோஜோன் சான்டா கிட்ஸ் பலூன் ரன் சீசன் – 2 – 1 கிலோ மீட்டர் ஓட்டபந்தயம், 23 – ஆம் தேதி முதல் 25 – ஆம் தேதி வரை புரோசோன் கரோல் ஃபீஸ்டா ரூ பேண்ட் செயல்திறன் நிகழ்வு
மற்றும் 27 – ஆம் தேதி முதல் 29 – ஆம் தேதி வரை ஒரு பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் டிசம்பர் 31 – ஆம் தேதி இரவு அன்று 2025 புத்தாண்டை டிஜே நைட், லைவ் இன் கான்சர்ட், டிஜே பிளாக், ஷாம்விசால், மானசி பேச்சுலர் பிராண்ட் ஆகியோர் பங்குபெறும் செலிபிரட்டி நைட் நடைபெறுகிறது,
மேலும் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுடன், குழந்தைகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு ரூ – 2 லட்சம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட உள்ளது,இந்த விழாக்கால சலுகையாக மாலில் உள்ள 100 – க்கும் மேற்ப்பட்ட பிராண்டுகளின் மீது 50 சதவீத தள்ளுபடி விற்பனையும் நடைபெறவுள்ளது ” என்று கூறினர்.