ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதன்படி புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து இப்பேராலயத்தின் தென் மண்டல பேராயர் தாமஸ் அக்வினாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தி புதிதாக பிறந்து இருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் நோய் நொடியின்றி எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வேண்டுமென்று கூறி புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார்.
Leave a Reply