புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்

Spread the love

தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக, காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், மற்றும்  தமிழக போலீஸ் வீட்டு வசதி துறை டிஜிபியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் பணி ஓய்வு பெற்றனர். இதனையடுத்து காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.