, , , , ,

புதிய தகவல் தொழிலநுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். 158.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,

Spread the love

Colmbatore: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்தார். விமான நிலையத்தில இருந்து வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு

அளித்தனர்.

விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்பட தொடங்கியவுடன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவையின் தனி அடையாளமாக இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் இரண்டு அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 153 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 120 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உணவு அருந்தமிடம் மற்றும் பொது நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் இருந்து ஐந்தாம் தளம் வரை, தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்கா மொத்த 2,94,382 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வெளிப்புறத்தில் 158 கார் மற்றும் 151 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவில், ஐடி நிறுவனங்கள் செயல்பட துவங்கும் பட்சத்தில், கோவையின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.