புதிய கட்சி துவங்கிய மல்லை சத்யா – கட்சி கொடி அறிமுகம்

Spread the love

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, இன்று (செப்டம்பர் 14) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய கட்சியை துவங்கி, கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த அவர், வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருந்தார். அதன்பின் அவரது அடுத்த நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில் இன்று அவர் துவங்கிய புதிய கட்சியின் கொடி 75% சிவப்பும், 25% கருப்பும் நிறங்களைக் கொண்டது. கொடியின் வலது மேல் பகுதியில் ஏழு நட்சத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சியின் பெயரை வருகிற நவம்பர் 20ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.