பி.ஜே.பி ரேஷன் ஷாப்புக்கு போ- விரட்டப்பட்ட 88 வயது மரியக்குட்டி

Spread the love

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் மரியகுட்டி. தற்போது, 88 வயதான இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக இருந்தார். இதனால், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு மாதா மாதம் வழங்கும் பென்சன் தொகையை நிறுத்தி வைத்தது. இதனால், கடந்த 2023ம் ஆண்டு அங்கமாலியில் தெரு தெருவாக பிச்சையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் மரியகுட்டி. அப்போது, காங்கிரஸ் கட்சி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி மரியகுட்டியை பழி வாங்குவதாக கடுமையாக சாடியது. இதையடுத்து, மரியகுட்டிக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தனி வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி மீது மரியகுட்டிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த மே மாதத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதில், இருந்து வயது முதிர்ந்தவர் என்று கூட பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் மரியகுட்டியை கடுமையாக திட்டி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு மரியகுட்டி , அடிமாலியிலுள்ள ரேஷன் ஷாப்புக்கு பொருட்களை வாங்க சென்றார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர், இது காங்கிரஸ் கட்சி நடத்தும் ரேஷன் ஷாப். நீ, பி.ஜே.பி நடத்தும் ரேஷன் ஷாப்புக்கு போ என்று விரட்டி விட்டுள்ளனர். இதனால், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் வெறுங்கையுடன் சோகத்துடன் வீடு திரும்பினார் மரியகுட்டி. மூதாட்டி மரியகுட்டிக்கு ரேஷன் கடையில் பொருட்கள் கொடுக்காத விஷயம் வெளியே கசிந்து கேரளாவில் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கொதிப்படைந்தனர்.

இந்த தகவல் திருச்சூர் எம்.பியும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி காதுக்கும் எட்டியது. இதையடுத்து, அவர் தனது சகாக்களை மரிய குட்டி வீட்டுக்கு அனுப்பி தேவையான அனைத்து உணவு பொருட்கள்,அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இது தொடர்பான வீடியோக்களையும் சமூகவலைத் தளத்தில் சுரேஷ் கோபி பகிர்ந்துள்ளார்.