பிரதமர் மோடி சமீபத்தில் 2 நாள் சுற்றுபயணமாக இங்கிலாந்து சென்றார். அவருக்கு அங்குள்ள இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இந்த புகைபடங்கள் மற்றும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியொக்களில் பிரதமருக்கு அருகில் இருக்கும் ஒரு பெண்ணும் பலரால் கவனிக்கப்பட்டார். யார் அந்த பெண்? பிரதமருக்கு அருகில் இருக்கு அவர் வகிக்கும் பதவி என்ன?
மணிப்பூர் சேனாபதி மாவட்டம், கைபி கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அடாசோ கபேசா தான் அந்த பெண். பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பான இந்தியாவின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவான எஸ்.பி.ஜியில் பணியாற்றும் முதல் பெண் ஆவர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய ஆயுதக் காவல் படையான சஷாஸ்திர சீமா பாலில்தான் அவரது பயணம் தொடங்கியது . தற்போது உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள 55வது பட்டாலியனில் பணியாற்றுகிறார். எஸ்பிஜியில் முதல் முறையாக பெண் சேர்க்கப்பட்டது, இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தில் பெண்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஜியில் சேர்ந்தது அடாசோ கபேசாவின் ஒரு தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்ல. இது இந்திய பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ சேவைகளில் பெண்கள் சேரவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பலர் அவரை ஒரு முன்மாதிரியாகவும், திறமையால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறார் என புகழ்ந்து வருகின்றனர்.
சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) என்பது இந்தியப் பிரதமரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும், சில சமயங்களில் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு படையாகும். அதன் உறுப்பினர்கள் கடுமையான உடல் பயிற்சி, தந்திரோபாய மற்றும் உளவியல் பயிற்சியை மேற்கொள்வர்.
இதுவரை, எஸ்.பி.ஜி முழுக்க முழுக்க ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு பிரிவாக இருந்தது. இந்த எச்பிஜியில் அடாசோ கபேசாவின் நுழைவு வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல … இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு உத்வேகம் ஆகும்.



Leave a Reply