, ,

பிரசாதங்களை கொண்டு ராமரின் உருவத்தை வரைந்த கோவை கலைஞர்

ராமர் கோயில் கும்பாபிஷேகம்
Spread the love

ராமரின் பிரசாதங்களை கொண்டு ராமரின் உருவத்தை கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் வரைந்து அசத்தி உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. சில பிரபலங்களும் பக்தர்களும் ராமரின் அவர்களின் கலை படைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் ராமருக்கு பிரசாதங்களாக படைக்கும் இனிப்புகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றை கொண்டு ராமரின் உருவத்தை வரைந்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யுஎம்டி ராஜா என்ற நகை வடிவமைப்பாளர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமருக்கு படைக்கும் இனிப்பு வகைகளான பூந்தி, கேசரி, அவல், எல் உருண்டை ஆகியவற்றில் வண்ண கலவைகளை சேர்த்து ராமரின் உருவத்தை வரைந்துள்ளார்.

இதனை செய்து முடிக்க ஒரு நாள் ஆனதாக கூறும் அவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்த ஓவியத்தை வரைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.