, ,

பிரகதி மருத்துவமனையில் புதிய பிரிவுகளை சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

C P Radhakrishnan
Spread the love

கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் தலைமையில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய பிரிவுகளை துவக்கி வைத்தார். மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை பிரிவு, எலும்பியல் & மூட்டு மாற்று பிரிவு, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று பிரிவு,ஆர்த்ரோஸ்கோபி & காயம் பிரிவு, முதுகெலும்பு அறுவை சிகிச்சை பிரிவு, தலையில் காயம் & நரம்பியல் பிரிவு, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு நோய் பிரிவு, காஸ்ட்ரோஎன்டாலஜி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இதயவியல், நுரையீரல் ஆய்வு, பெண்கள் மையம், குழந்தைகள் மருத்துவமனை, அதிநவீன பரிசோதனை மற்றும் படமாக்குதல் பிரிவு போன்றவை அறிமுகம் செய்யப்படுகின்றன.