கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேவைவி முறையின் கீழ், ஃபாஸ்டாக் சரியான வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய புகைப்படங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த முறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இனி, ஃபாஸ்டாக் வழங்குவதற்கு முன், வங்கிகள் அந்த வாகனத்தின் விவரங்களை மத்திய அரசின் வாகன் எனப்படும் வாகனத் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு டிஜிட்டல் முறையில் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன் தரவுத்தளத்தில் வாகன விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகே ஃபாஸ்டாக் வழங்கப்படும்.
ஒருவேளை, குறிப்பிட்ட வாகனத்தின் விவரங்கள் வாகன் தரவுத்தளத்தில் இல்லாதபட்சத்தில், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் நேரடியாக சரிபார்க்கப்பட்ட பின்னரே ஃபாஸ்டாக் வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இனி வாகன உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமின்றி, டிஜிட்டல் சரிபார்ப்பு மூலம் எளிதாக ஃபாஸ்டாக் பெற முடியும். இருப்பினும், விதிமுறைகளை மீறும் சந்தர்ப்பங்களில் மட்டும் கேவைவி நடைமுறை மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.



Leave a Reply