வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தலில், பாஜக 71 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலில் 9 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிகார் தேர்தல் வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கியம்), சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து களமிறங்குகின்றன.
இந்த வேட்பாளர் அறிவிப்புடன் பிகார் அரசியலில் பாஜக தன்னுடைய பிரச்சார வேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.



Leave a Reply