கோவையில் பா.ம.க.வின் 37வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு, கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உறுதிமொழி வெளியிட்டுள்ளார்.
அவரது மடலில், “தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரின் குரலாக வலியுறுத்தும் பாட்டாளி மக்கள் கட்சி, 36 ஆண்டு பயணத்தை பூர்த்தி செய்து, 37ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்புப் பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வின் சாதனைகளைக் குறிப்பிட்ட அவர், சமூகநீதிக்கான போராட்டங்கள், இட ஒதுக்கீடு வெற்றிகள், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், போதைவஸ்துவுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பங்களிப்புகள் குறித்து வலியுறுத்தினார்.
மேலும், மக்களுக்கு 10 முக்கிய உரிமைகள் – வேலை, கல்வி, விவசாயம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை மீட்பதற்காக, ஜூலை 25 (அய்யா ராமதாஸ் பிறந்த நாள்) முதல் நவம்பர் 1 (தமிழ்நாடு நாள்) வரை “தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்” மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் மூலமாக, பா.ம.க. ஆளும் கட்சி ஆகும் பாதையை வகுக்க விரும்புவதாகவும், 38வது ஆண்டு விழாவை ஆட்சி கட்சியாக கொண்டாடுவோம் என்பதும் அவரது உரையின் முக்கிய பகுதி.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27, 28 தேதிகளில் தமிழகத்திற்கு வருகிறார். அரியலூரில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு, பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply