சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், கட்டண செலுத்தும் நேரத்தை குறைக்கவும் ‘பாஸ்டேக்’ மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த முறையில், வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆனால், சில வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை முன்பக்க கண்ணாடியில் ஒட்டாமல் வாகனத்தில் கைவசம் வைத்திருக்கின்றனர். இதனால், அவர்கள் சுங்கச்சாவடியின் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தாமல் செல்லும் வழக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
சுங்கச்சாவடியில் பணியாளர்கள் ஆணையிடும் நேரத்தில், அவர்கள் கையில் வைத்திருக்கும் ஸ்டிக்கரை காட்டி கட்டணத்தை செலுத்துகின்றனர். இது மின்னணு கட்டண முறையின் நோக்கத்தை பாதிக்கிறது என புகார் எழுந்துள்ளது.
இதனைத் தடுக்கும் நோக்கில், பாஸ்டேக் ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டாமல் வைத்திருக்கும் வாகனங்களை பிளாக்லிஸ்ட் செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய நடவடிக்கையால், முறையை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Leave a Reply