பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான ஐடியாதான் பிரைம் & ஃப்ரெஷ்மென் இக்னைட் 2025 போட்டி மற்றும் விருது வழங்கும் விழா
டாக்டர் எம்.பிரின்ஸ், இயக்குனர், புதிய கண்டுபிடிப்புகள், பார்க் கல்வி குழுமம், வரவேற்பு உரையுடன் விழா துவங்கியது.
ஏசியன் அசோசியேட்ஸ், கோவை நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் (2004-2008 பேட்ச்) முன்னாள் மாணவர் சிவசங்கர் செல்வராஜ் இந்த நாளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, எந்த செயல்களிலும், கண்டுபிடிப்புகளிலும் பொறியாளர்களே மையமாக உள்ளனர். ஆகவே பொறியியல் மாணவர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து மக்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்
ஓசோடெக் ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் கோவை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பரதன் குப்புசாமி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில் பொறியியல் என்றாலே வடிவமைப்பு, ஆகவே வடிவமைப்பு சரியாக அமைந்தால் இன்ஜினியரிங்கில் அனைத்தும் வெற்றியே என்று கூறினார். மேலும், இன்று உருவாக்கும் தொழில்நுட்பங்கள் நாளை மனிதர்களும் சுற்றுசூழலும் மேம்பட உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பார் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர். அனுஷா ரவி, விருது வழங்கும் விழாவினை தலைமை தாங்கி, அமெரிக்காவில் ஏர் பஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தையும், சந்தித்த சவால்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும், இன்ஜினியராக இருப்பதில் என்றும் பெருமை கொள்வோம் என்றார்.
இறுதியாக இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பரிசு மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்



Leave a Reply