பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை நெருங்கிய வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம்..
Spread the love
பாரிஸ் ஒலிம்பிக்போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், உலக சாம்பியனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இவர், போகத் தங்கப்பதக்கத்தை பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்த நிலையில், அவரை பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்து அறிவித்து உள்ளது. வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது இந்திய ரசிசர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply