, , ,

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் – பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

Bharathiar University
Spread the love

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிறுத்தை இருப்பதை கவனித்துள்ளனர். மேலும், மைதானத்தில் பயிற்சியில் இருந்த மாணவர்களும் சிறுத்தையை பார்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு, அந்நாளிற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டு, ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேசமயம், வனத்துறையினர் சிறுத்தையை கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.