நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அரசியல் கட்சியினர் தற்போது போஸ்டர்கள் மூலம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் சார்பில் நடிகர் வடிவேலுவின் கார்டூன் அனிமேஷன் புகைப்படத்துடன் பாஜக அரசை விமர்சித்து சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி என குறிப்பிட்டு கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்திலும் வைரலாகி உள்ளது.
Leave a Reply