பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.
தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது.
உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் எந்த நிலைக்கு வந்தது? அதே சமயம், முதல்வர், பாஜக நடத்திய கையெழுத்து இயக்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பதால், திமுகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
டெக்னிக்கல் புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதைப்போல், மருத்துவ படிப்பும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால், இது துரைமுருகனுக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பு இல்லை.
துரைமுருகன் கூறும் கருத்துக்கள் சரியான விவாதமல்ல. சந்தான பாரதியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது திமுகவினரின் செயல். பாஜக போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர்களின் புகைப்படம் மட்டுமே இடம் பெறும்,” என அவர் தெரிவித்தார்.
Leave a Reply