,

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில்லை – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

edappadi palaniswamy
Spread the love

பாஜகவுடன் அதிமுக கூட்டணியில்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, ” மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி திமுக அரசாங்கம் நடத்துகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக திமுக இருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்படுகிறார்கள்.

அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். பாஜகவுடன் அதிமுக  மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை.  உறுதியாக சொல்கிறோம் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று  கூறினார்.